news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews பார்சிலோனா அணி தொடர்ந்து 9 போட்டிகளில் வெற்றி
tv

Also Watch

பார்சிலோனா அணி தொடர்ந்து 9 போட்டிகளில் வெற்றி

வெற்றிபெற்று சாதனை

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
லிகா கால்பந்து தொடர்

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து தொடர்

  • ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனா எஃப்சி அணி தொடர்ந்து 9 போட்டிகளிலும் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது. ரியல் பெட்டிஸ் உடன் மோதிய போட்டியில் பார்சிலோனா 5-க்கு 2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பார்சிலோனாவின் லமின் யமால் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
  • முதல் பாதியில் 2-க்கு 1 என முன்னிலை வகித்த பார்சிலோனா, 2-வது பாதியில் மேலும் 3 கோல்கள் அடித்து வெற்றிபெற்று, புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக் கால்பந்து தொடர்

  • இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் மான்செஸ்டர் சிட்டி அணி, 129 ஆண்டுகளுக்கு பின் விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
  • இப்ஸ்விச் சிட்டி அணிக்கு எதிரான 7 வது போட்டியில், மான்செஸ்டர் சிட்டி அணி 3-க்கு 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் பிரீமியர் லீக் நடப்பு சீசனில் அனைத்து போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்துள்ளது.

தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டி

  • தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் உத்தரகாண்ட் அணி 134 ரன்னில் சுருண்டது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில், டாஸ் வென்ற தமிழ்நாடு பந்துவீச்சை தேர்வு செய்தது.
  • முதலில் பேட்டிங் செய்த உத்தரகாண்ட் அணி, தமிழகத்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 56.2 ஓவர்களில் 134 ரன்னில் சுருண்டது. தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி ஆட்ட நேர முடிவில் 27 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 85 ரன்கள் எடுத்துள்ளது.



Related Link
இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு ஸ்ரேயஸ் அறிவுரை

இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு ஸ்ரேயஸ் அறிவுரை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இனி தண்ணீர் தேவையில்லையாம்!

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved