news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஐபிஎல் தொடரில் புதிய விதிமுறைகளை வெளியிட்ட பிசிசிஐ
tv

Also Watch

tv

Read this

ஐபிஎல் தொடரில் புதிய விதிமுறைகளை வெளியிட்ட பிசிசிஐ

IPL 2026

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
விளையாட்டு செய்திகள்

பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் பி.வி.சிந்து வெற்றி :

சீனாவில் நிங்போ((Ningbo)) நகரில் நடைபெற்று வரும் 43ஆவது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய நட்சத்திரம் பி.வி சிந்து போராடி வெற்றி பெற்றார். மலேசியாவின் வாங் சிங் லிங்-ஐ((Wong Ling Ching)) எதிர்கொண்ட பி.வி.சிந்து, 15க்கு 21, 21க்கு 11 மற்றும் 21க்கும் 19 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

ஐபிஎல் தொடரில் புதிய விதிமுறைகளை வெளியிட்ட பிசிசிஐ :

ஐபிஎல் தொடரில் 16 பேர் கொண்ட அணியில், களத்தில் இருக்கும் 11 பேரை தவிர்த்து கூடுதலாக உள்ள 5 பேர் மட்டுமே மைதானத்திற்குள் நுழையவும், எல்லைக் கோட்டருகே இருக்க வேண்டுமென பிசிசிஐ புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. மற்ற வீரர்கள் அனைவரும் ஓய்வு அறை அல்லது வெளிப்புற அறையிலேயே இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 5ஆம் தேதி ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ கேப்டன் ரிஷப் பந்த், பந்தை பவுண்டரிக்கு விளாசியபோது, எல்லைக் கோட்டை நெருங்கிய பந்தை லக்னோ வீரர் ஆவேஷ் கான், மட்டையால் திருப்பி அடித்தது சர்ச்சையானது. இதன் காரணமாகவே பிசிசிஐ புதிய விதிமுறைகளை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ரியல் மேட்ரிட் அணியை வீழ்த்தி பேயர்ன் முனிச் வெற்றி :

ஸ்பெயினில் நடைபெற்று வரும் ஐரோப்பிய கிளப் அணிகளுக்கிடையிலான கால்பந்து லீக் போட்டியில் ஜெர்மனியின் பேயர்ன் முனிச் ((Bayern Munich)) அணி வெற்றி பெற்றது. காலிறுதி சுற்றின் முதலாவது போட்டியில் ஸ்பெயினின் ரியல் மேட்ரிட்(((Real Madrid )) அணியை பேயர்ன் முனிச் அணி எதிர்கொண்டது.

லூயில் டியாஸ் மற்றும் ஹாரி கேன் ஆகியோர் தலா ஒரு கோல் அடிக்கவே 2க்கு 1 என்ற கோல் கணக்கில் பேயர்ன் முனிச் அணி வெற்றி பெற்றது. ரியல் மேட்ரிட் சார்பில் எம்பாப்வே ஒரு கோல் அடித்தார்.

சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் பதில் :

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் சீனியர் வீரர் மகேந்திர சிங் தோனி முழு உடற்தகுதியை எட்ட கொஞ்ச நாட்கள் தேவைப்படும் என சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறினார்.

தோனி எப்போது களமிறங்குவார் என்று உறுதியாக சொல்ல முடியாது என கூறிய அவர், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பிரேவிஸ் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறினார். வரும் சனிக்கிழமை நடைபெறும் போட்டியில் டெல்லி அணியுடன் சென்னை அணி பலப்பரீட்சை நடத்துகிறது.

Related Link
வைபவ் சூர்யவன்ஷி குறித்து யுவ்ராஜ் சிங் கருத்து

வைபவ் சூர்யவன்ஷி குறித்து யுவ்ராஜ் சிங் கருத்து




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ஜஸ்பிரித் பும்ரா புகழாரம்

0
10 mins agoshare
விளையாட்டு செய்திகள் 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved