news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் வாழ்த்து
tv

Also Watch

பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் வாழ்த்து

வெள்ளிப்பதக்கம்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இளவேனில்

ஆசிய விளையாட்டுப்போட்டியில் பதக்கம் வென்ற தமிழ்ப்பெண்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இளவேனில் வாலறிவனின் இந்த சாதனை இளம் தலைமுறையினருக்கு இலக்கை நிர்ணயித்து, விடாமுயற்சியுடன் களமிறங்கி சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிப்பதாகவும், இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள வீராங்கனைகளின் வெற்றிப் பயணம் மேலும் பல புதிய வரலாறுகளைப் படைக்கட்டும் எனவும் முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டு போட்டி- 6 பதக்கங்களை வென்ற இந்தியா

ஜப்பானில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 4 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் இந்திய அணியை சேர்ந்த ஹிமான்ஷ தில்லோன் 252.4 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும், ருத்ரங்க்ஷ் பாட்டீல் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

தற்காப்புக் கலையில் இந்தியாவுக்கான முதல் பதக்கமாக வெண்கலப் பதக்கத்தை சுசிகா தரியல் வென்றார்.

இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் வீரர் மீது மோதிய உருளை

தாய்லாந்து லீக் போட்டியின் போது பயிற்சியில் ஈடுபட்டிருந்த இங்கிலாந்து அணியின் முன்னாள் முன்னணி கால்பந்து வீரர் ஆண்ட்ரோஸ் டவுன்சென்ட் ((Andros Townsend))மீது மைதானத்தை சமப்படுத்தும் உருளை மோதிய வீடியோ வெளியாகி உள்ளது.

இதில் அவர் பெரிய காயமின்றி தப்பிய நிலையில், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். டவுன்சென்ட் தற்போது தாய்லாந்து கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.

Related Link
ஆசிய விளையாட்டு ஹாக்கி போட்டி - இந்தியா வெற்றி

ஆசிய விளையாட்டு ஹாக்கி போட்டி - இந்தியா வெற்றி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் வாழ்த்து

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved