Also Watch
Read this
By: Manigandan Raja

ஐபிஎல் தொடரில் இருந்தும் சிஎஸ்கே வெளியேறியது :
ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே ஆஃப் சுற்றுக் கனவை, குஜராத் டைட்டன்ஸ் அணி தவிடுபொடியாக்கி விட்டது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 229 ரன்களை குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13.4 ஓவர்களில் 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அடுத்த ஆண்டு நாம் தோனியைப் களத்தில் பார்க்க முடியுமா?

அடுத்த ஆண்டு தாம் தோனியைப் களத்தில் பார்க்க முடியுமா என்ற கேள்விக்கு, அது அடுத்த ஆண்டுதான் தங்களுக்கும் தமக்கும் தெரியவரும் என்று, அவர் இல்லாதது தங்களுக்குப் பெரும் இழப்பாகும் என சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் தெரிவித்துள்ளார்.
அடுத்த சீசன் குறித்து உறுதியாக எதுவும் சொல்ல முடியாது என்றவர், ஆனால், தற்போது தங்களுடன் இருக்கும் வீரர்களை நினைத்து தாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.
இரவு விருந்துக்கு ரூ.3.40 லட்சம் செலவு செய்ததாக பில் :

இந்திய அணி 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றபோது நடைபெற்ற இரவு விருந்து செலவு குறித்து இணையத்தில் வைரலாகி வரும் பில் போலியானது என முன்னாள் கிரிகெட் வீரர் கீர்த்தி ஆசாத் தெரிவித்துள்ளார்.
பீர், சாம்பெய்ன், சிகரெட் போன்றவை வாங்குவதற்கு சுமார் மூன்றரை லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாக பில் வைரலாகி வரும் நிலையில், அந்த பில் மட்டுமல்ல அதிலுள்ள கபில்தேவின் கையெழுத்தும் போலியானது என தெரிவித்துள்ளார்.
ஜெனீவா ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்திய ஜோடி அபாரம் :

ஜெனீவா ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்திய ஜோடி வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, சுவிட்சர்லாந்தின் ஜாகுப் பால், டொமினிக் ஸ்டிரிக்கர் ஜோடியை 7-க்கு 6, 7-க்கு 5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
ஹைதராபாத் - பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை :
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஹைதராபாத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இரு அணிகளும் சமபலத்தில் இருந்தாலும், பெங்களூரு அணி வெற்றிபெற சற்று கூடுதல் வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
புள்ளி பட்டியலில் ஆர்சிபி முதல் இடத்திலும், சன் ரைசர்ஸ் 3-வது இடத்திலும் உள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved