சீன ஓபன் டென்னிஸ் தொடரில் நோவக் ஜோகோவிச் புதிய சாதனை படைத்துள்ளார். காலிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் சீன ஓபனில் தொடர்ந்து 32-வது வெற்றியை பதிவு செய்தார்.
மேலும், ஒரே தொடரில் தொடர்ந்து 31 வெற்றிகள் பெற்றிருந்த ரஃபேல் நடாலின் சாதனையை முறியடித்துள்ளார்.
நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டி: ஸ்பெயின் ஹாட்ரிக் வெற்றி
நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி 3-க்கு 1 என செக்குடியரசை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. இங்கிலாந்து, குரோஷியாவை வீழ்த்திய ஸ்பெயின் அணி, தொடர்ச்சியாக 3-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஸ்பெயின் அணியின் யமால், ரோட்ரி, மெரினோ ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். செக்குடியரசு அணிக்கு ஜிரி ஸ்லாமா மட்டும் ஒரு கோல் அடித்தார்.