Also Watch
Read this
By: Manigandan Raja

முதலாவது ஒருநாள் கிரிக்கெட் :
வங்கதேசத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி, வங்கதேச அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 30.4 ஓவர்களில் 114 ரன்களுக்குள் சுருண்டது. அபாரமாக பந்து வீசிய நஹித் ரானா, 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் ஆடிய வங்கதேச அணி, 15.1 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 115 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved