Also Watch
Read this
By: Manigandan Raja

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் தொடர்
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா அதிகாரப்பூர்வமற்ற 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இதில், ஒருநாள் போட்டி அணிக்கு கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட், துணை கேப்டனாக தேவ்தத் படிக்கல் நியமிக்கப்பட்டுள்ளனர். டெஸ்ட் அணிக்கு கேப்டனாக தேவ்தத் படிக்கலும், துணை கேப்டனாக தமிழகத்தின் சாய் சுதர்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், ஒருநாள் போட்டி அணிக்கு சீனியர் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
துலீப் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி
துலீப் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியின் 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் கிழக்கு மண்டல அணி 584 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில், கிழக்கு மண்டல அணி முதல் இன்னிங்ஸில் 708 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தொடர்ந்து களமிறங்கிய தெற்கு மண்டல அணி முதல் இன்னிங்ஸ் 336 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 2-வது இன்னிங்ஸை தொடங்கிய கிழக்கு மண்டலம் 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் 51 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி வெறும் 133 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில், இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் அசான் அவைஸ், அப்துல்லா ஷபீக், ஷான் மசூத், கேப்டன் பாபர் அசாம் உள்ளிட்ட பெரும்பாலான வீரர்கள் ஆகியோர் சொற்ப ரன்களிலேயே வெளியேறினர்.

இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டங் 4 விக்கெட் கைப்பற்றினார். ஆலி ராபின்சன் தனது 100-வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved