news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் இந்தியா அபாரம்
tv

Also Watch

ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் இந்தியா அபாரம்

பதக்கங்கள் வென்றது

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பாரா விளையாட்டு

ஒரே நாளில் இந்தியாவுக்கு 24 பதக்கங்கள் கிடைத்தன

  • ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் நேற்று ஒரே நாளில் இந்தியா 5 தங்கம், 6 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்கள் வென்றது.
  • ஜப்பானின் அயிச்சி நகோயாவில் நடைபெற்று வரும் போட்டியில், ஆண்களுக்கான உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் பிரிவுகளிலும், பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டத்திலும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.

ஆசிய பாரா விளையாட்டு: இந்திய வீரர் நிஷாத் குமார் 2 தங்கம்

  • ஆசிய பாரா விளையாட்டில் இந்திய வீரர் நிஷாத் குமார் இரு தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். நீளம் தாண்டுதலில் தங்கம் வென்ற நிஷாத் குமார், உயரம் தாண்டுதலிலும் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
  • ஜப்பானின் அயிச்சி நகோயாவில் நடைபெற்ற ஆண்களுக்கான டி47 உயரம் தாண்டுதலில் நிஷாத் குமார் 2.04 மீட்டர் உயரம் தாண்டி வரலாற்று சாதனை நிகழ்த்தினார். ஏற்கெனவே ஒரே தொடரில் 2 இந்தியர்கள் 2 தங்கப் பதக்கம் வென்றிருப்பதின் மூலம் நிஷாத் குமாரும் 3-வது வீரராக இணைந்துள்ளார்.

ஜிம்பாப்வேக்கு எதிரான 3-வது டி20 போட்டியிலும் இந்தியா வெற்றி

  • 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியிலும் இந்திய மகளிர் அணி வெற்றிபெற்று, ஜிம்பாப்வே அணியை ஒயிட் வாஷ் செய்தது. ராய்பூரில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
  • 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்தது. சற்றே கடின இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக கைப்பற்றியது.


Related Link
தமிழக வீரர் சிவராஜன் சோலைமலைக்கு முதல்வர் விஜய் பாராட்டு

தமிழக வீரர் சிவராஜன் சோலைமலைக்கு முதல்வர் விஜய் பாராட்டு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கொட்டும் மழையிலும் வசூலை குவிக்கும் ரஜினியின் ஜெயிலர் 2

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved