இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று நடைபெற உள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் லக்னோவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-க்கு 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
ஆகவே, ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி இந்த ஆட்டத்திலும் அதிரடியை வெளிப்படுத்துமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகள் மோதும் 2-வது போட்டி
இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகள் மோதும் 2வது அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் போட்டி புதுச்சேரியில் இன்று நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில், கடந்த 6-ம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியா ஏ அணி வெற்றிபெற்ற நிலையில், இந்த போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன் செய்ய இந்திய அணி போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாகவும், சாய் சுதர்சன் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சீன ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ் போட்டியில் அபாரம்
சீன ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் மானவ் தாக்கர், மானுஷ் ஷா ஜோடி முன்னேறியது. பீஜிங் நகரில் நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் சீனாவின் ஜிங்குன் லியாங், பெங் ஜியாங் ஜோடியை எதிர்கொண்ட மானவ், மானுஷ் ஜோடி 3-க்கு 0 என்ற கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
அதேசமயம், கலப்பு இரட்டையர் பிரிவு மற்றும் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி தோல்வியடைந்தது.