news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் இன்று மோதல்
tv

Also Watch

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் இன்று மோதல்

ஒருநாள் போட்டி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மேற்கிந்திய தீவுகள்

முதல் ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நடக்கிறது

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது. ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்திய அணியில், சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் களமிறங்குவது அணிக்கு பலமாகும்.

அதேபோல, ராகுல், நிதிஷ் குமார் ரெட்டி, ரவிந்திர ஜடேஜா என பேட்டிங் வலுவாக உள்ளது.

இந்திய அணி கேப்டனாக சுப்மன் கில் நீண்டகாலம் தொடர்வார்

சுப்மன் கில் கேப்டனாக இந்திய அணியை சரியான பாதையில் வழிநடத்தி வருவதாகவும், அவர் கேப்டனாக நீண்ட காலம் தொடர்வார் எனவும் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், கேப்டனாக அவரது அனுபவம் குறைவு என்றாலும், அணியை சரியான பாதையில் வழிநடத்தி செல்வதற்கான தீவிரம் அவரிடம் உள்ளதாகவும், அவரது திட்டங்களில் மிகவும் தெளிவாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

முதியோர் இல்லத்தில் வசிக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர்

முதியோர் இல்லத்தில் வசிப்பதாக இந்திய அணியின் முன்னாள் பேட்டர் வினோத் காம்ப்ளி வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை கலக்கமடைய செய்துள்ளது. மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக தானேவில் உள்ள முதியோர் இல்லத்தில் வசிக்கிறார்.

தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும், இங்குள்ள வசதிகள் சிறப்பாக உள்ளதாகவும், எல்லோரும் தன் மீது மிகுந்த அன்பாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Related Link
தமிழக வீரர்களுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்தார் முதல்வர் விஜய்

தமிழக வீரர்களுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்தார் முதல்வர் விஜய்

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காவலர்களுக்கு விடுமுறை குறித்து நடிகர் கார்த்தி பரபரப்பு பேச்சு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved