Also Watch
Read this
By: Manigandan Raja

அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் கஜகஸ்தானின் எலினா ரைபகினா, போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ காப், ஜப்பானின் நவோமி ஒசாகா உள்ளிட்டோர் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
அதேபோல, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், சிலியின் அலெஜான்டிரோ டபிலோவை வீழ்த்தி 4-வது சுற்றிக்கு முன்னேறினார்.
ஸ்பெயினின் அல்காரஸ் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் உலகின் 3-ம் நிலை வீரர் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 4-வது சுற்றுக்கு முன்னேறினார். நியூயார்க் நகரில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்று போட்டியில் நடப்பு சாம்பியனான அவர், 6-க்கு 3, 6-க்கு 4, 6-க்கு 1 என்ற நேர் செட்டில் சீனாவின் யிங் யூவை எளிதில் வீழ்த்தினார்.

ஜெசிகா பெகுலா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 4-வது சுற்றுக்கு முன்னேறினார். நியூயார்க் நகரில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று போட்டியில், 3ம் நிலை வீராங்கனை அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா சரிவில் இருந்து மீண்டு வந்து 1-க்கு 6, 6-க்கு 4, 6-க்கு 3 என்ற செட் கணக்கில் கனடாவின் லேலா பெர்னாண்டஸை வீழ்த்தினார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved