Also Watch
Read this
By: Manigandan Raja

ஆசிய விளையாட்டு: மகளிருக்கான வூஷூ போட்டி
ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிருக்கான வூஷூ காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை ரோஷிபினா தேவி வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம், இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை அவர் உறுதிசெய்துள்ளார்.
வூஷூவில் 60 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற ரோஷிபினா தேவி, மக்காவு நாட்டை சேர்ந்த சுமான் சின்னை 5-க்கு 0 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். ரோஷிபினா தேவி ஏற்கெனவே ஆசிய விளையாட்டில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றவர்.
வால்ட் பிரிவில் பிரணதி நாயக் இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை பிரணதி நாயக், வால்ட் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார். மொத்தம் 19 பேர் பங்கேற்ற இந்த போட்டியில் பிரணதி நாயக் 12. 916 புள்ளிகளைப் பெற்று 7-வது இடம் பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

மேற்குவங்கத்தை சேர்ந்த பிரணதி நாயக் இதுவரை ஆசிய ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப்பில் 3 முறை வெண்கல பதக்கம் வென்றுள்ளதால், இந்த முறையும் பதக்கம் வெல்வாரா என்ற எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.
ஜப்பானை வீழ்த்தி இந்திய வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேற்றம்
ஆசிய விளையாட்டு போட்டியின் பேட்மிண்டன் ஆடவர் பிரிவில் இந்திய வீரர்கள் ஜப்பானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினர். காலிறுதியின் முதல் ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென், ஜப்பானின் கொடாய் நரவ்காவை வீழ்த்தினார்.

அதேபோல, இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி, ஜப்பானின் யுகோ கோபயாஷி - தகுரோ ஹோகி ஜோடியை வென்றனர். 3-வது ஆட்டத்தில் ஆயுஷ் ஷெட்டி, ஜப்பானின் கோகி வட்டாநபேவை வீழ்த்தினார். இதன் மூலம், இந்திய அணி 3-க்கு 0 என வெற்றிபெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved