Also Watch
Read this
By: Manigandan Raja

அரையிறுதியில் வங்கதேசத்தை 40 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது
மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில், இந்திய மகளிர் அணி வங்கதேசத்தை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்தியா 20 ஓவர்களில் 149 ரன்கள் எடுத்தது. 150 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கலமிறங்கிய வங்கதேசம் 109 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
தொடரில் விளையாடுவதற்கு உடற்தகுதி பெற்ற பும்ரா
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவதற்கு உடற்தகுதி பெற்றுள்ளார் . பிசிசிஐயின் உடற்தகுதித் தேர்வில் பும்ரா தேர்ச்சி பெற்றுள்ளார். இதனால் வரும் டி20 தொடரில் இந்திய அணிக்கு அவரது பங்கேற்பு உறுதியாகியுள்ளது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved