news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி
tv

Also Watch

பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி

பாகிஸ்தான் அணி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
India win

மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்

மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த பாகிஸ்தான் அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 18.1 ஓவர்களில் 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, 8.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு அனுமதி இலவசம்

துலீப் டிராபி கிரிக்கெட் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில், திலக் வர்மா தலைமையிலான தெற்கு மண்டல அணியும், இஷான் கிஷான் கிழக்கு மண்டல அணியும் மோதுகின்றன.

போட்டி இன்று தொடங்கி 10-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த போட்டியை ரசிகர்கள் இலவசமாக பார்க்கலாம் எனவும், காலை 9 மணிக்கு 4-வது கேட் வழியாக ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

தோனி தன்னுடைய இடத்தை விட்டு கொடுத்தார்

தான் இந்திய அணிக்கு வந்தபோது, தோனி அவருடைய இடத்தை தனக்காக விட்டுக்கொடுத்து ‘நீ டாப் ஆர்டரில் விளையாடு, நான் உனக்கு துணையாக இருப்பேன்' என்று கூறியதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரய்னா  நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், ஒரு கேப்டன் உங்களுக்காகத் தனது இடத்தைத் தியாகம் செய்யும்போது, நீங்கள் அவருக்காக சிறப்பாக செயல்பட வேண்டும் என நினைப்பீர்கள், அதனால்தான் நான் அவருக்காக ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று நினைத்தேன் என்றார்.

Related Link
பும்ராவுக்கு பதிலாக பிரின்ஸ் யாதவ் சேர்ப்பு

பும்ராவுக்கு பதிலாக பிரின்ஸ் யாதவ் சேர்ப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காணொளியை வெளியிட்டு கேலி செய்த அமெரிக்கா

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved