Also Watch
Read this
By: Manigandan Raja

நெதர்லாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி
உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகள் முழுவதும் விற்பனையாகி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1973-ல் நடைபெற்ற அரையிறுதி போட்டிக்கு பிறகு நெதர்லாந்தின் வாக்னர் ஹாக்கி திடலில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று ((ஆக.19)) மோதுகின்றன.
1973 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி 1-க்கு 0 என பாகிஸ்தானை வென்றது. இந்த சூழலில், 10 ஆயிரம் பார்வையாளர்கள் அமரக்கூடிய திடலில் நடைபெறும் இந்த போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன.
இலங்கை தடுமாற்றம்: வெற்றியின் விளிம்பில் இந்திய அணி
முதல் டெஸ்ட்டின் 2-வது இன்னிங்கில் இலங்கை அணி தடுமாறி வருவதால் இந்திய அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இலங்கையின் காலே நகரில் நடைபெற்று வரும் போட்டியில் முதல் இன்னிங்கில் இந்திய அணி 462 ரன்கள் குவிந்த நிலையில், இலங்கை அணி 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தொடர்ந்து, 2-வது இன்னிங்சில் இந்திய அணி 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 372 ரன்களை இலக்காக கொண்டு 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி, 4 விக்கெட்கள் இழப்புக்கு 84 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது. இறுதிநாள் ஆட்டம் இன்று நடைபெறும் நிலையில் இலங்கை அணியின் வெற்றிக்கு 288 ரன்கள் தேவைப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved