உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அம்ருதா வெள்ளிப்பதக்கம் வென்றார். அமெரிக்காவில் நடைபெற்ற 23 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் பிரீஸ்டைல் போட்டியின் 72 கிலோ பிரிவில் இந்தியாவின் அம்ருதா பூஜாரி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இறுதிப்போட்டியில் உக்ரைனின் இரினா சப்லோட்ஸ்காவை எதிர்கொண்ட அம்ருதா, 0–6 என தோற்க வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இந்த தொடரில் இந்தியா 2 வெள்ளி, 1 வெண்கலம் என 3 பதக்கம் வென்றது.
வங்கதேசம், ஆப்கன், ஜிம்பாப்வே முத்தரப்பு ஒருநாள் தொடர்
முத்தரப்பு ஒருநாள் தொடரில் வங்கதேசத்தை 99 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வீழ்த்தியது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற போட்டியில், முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது.
பிரெண்டன் டெய்லர் 81 ரன்களும், எர்வின் 93 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து, 272 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம், 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜிம்பாப்வேயின் பிராட் எவன்ஸ் 45 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
வூஹான் ஓபன் டென்னிஸ் தொடரில் அபாரம்
வூஹான் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிச் சுற்றில் போலந்தின் மஜா சாவ்லின்ஸ்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச் சுற்றில் சக நாட்டை சேர்ந்த முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான இகா ஸ்வியாடெக் உடன் மோதிய அவர் 7-க்கு 5, 6-க்கு1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்றார்.
மற்றொரு அரையிறுதில் பிரிட்டனின் சோனே கர்தால் 7-க்கு 6, 7-க்கு 6 என்ற செட் கணக்கில் லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டோபென்கோவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.