Also Watch
Read this
By: Manigandan Raja

மெஸ்ஸிக்காக தாம் மகிழ்ச்சியடைவதாக லமின் யமால் பேட்டி :
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் எகிப்துக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி நேரத்தில் அர்ஜென்டினா அணி வெற்றிபெற்ற நிலையில், அந்த அணி வீரர் மெஸ்ஸியை ஸ்பெயின் வீரர் லமின் யமால் பாராட்டி உள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மெஸ்ஸி இதுவரை மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளதாகவும், மெஸ்ஸி யார் என்பது அனைவருக்கும் தெரியும் எனவும் கூறினார்.
ஆனால், உலகக் கோப்பையில் அவர் இப்படியொரு ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை எனவும், அவருக்காக தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.
முன்னாள் ஜாம்பவான் சச்சின்,யுவ்ராஜ் சிங் வாழ்த்துப் பதிவு :

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் பெயர் ICC HALL OF FAME பட்டியலில் இணைத்து கௌரவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கங்குலிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கங்குலியை தனக்கு 14 வயதிலிருந்தே தெரியும் என்றும், அவருக்கு வழங்கப்பட்ட இந்த கௌரவத்தை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்ததாகவும் பதிவிட்டுள்ளார்.
தாங்கள் ஒரு அணியை உருவாக்கவில்லை...ஒரு தலைமுறையையே உருவாக்கிவிட்டு சென்றுள்ளீர்கள் எனக் கூறி முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவ்ராஜ் சிங்கும் வாழ்த்துப் பதிவிட்டுள்ளார்.
இந்திய அணிக்காக அக்சர் படேல் 100 டி20 போட்டிகள் :

இந்திய அணிக்காக 100 டி20 போட்டிகளில் விளையாடுவேன் என கனவிலும் நினைக்கவில்லை என்று ஆல்ரவுண்டர் அக்ஷர் படேல் தெரிவித்துள்ளார். இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டி20 போட்டி அவர் இந்திய அணிக்காக விளையாடிய 100-வது டி20 போட்டியாகும்.
இந்த சூழலில், இதுகுறித்து பேசிய அவர், இந்த சாதனையை தாம் தனியாளாக படைத்துவிடவில்லை எனவும், இந்த பயணத்தில் தனக்கு ஆதரவளித்த குடும்பத்தினர், சக வீரர்கள், பயிற்சியாளர்கள் குழு அனைவருக்கும் தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.