Also Watch
Read this
By: Manigandan Raja

சர்வதேச கிரிக்கெட்டில் 50 சிக்ஸர்கள் அடித்து அசத்தல்
2026-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் 50 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய பேட்டர் என்ற சாதனையை இஷான் கிஷன் படைத்துள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 42 ரன்கள் எடுத்த இவர், ஒரு சிக்ஸர் அடித்ததின் மூலம் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
இந்த போட்டியில், அபிஷேக் சர்மா 82 ரன்களும், இஷான் கிஷன் 42 ரன்களும் எடுத்ததால் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இஷான் சமீபத்தில் நடந்த துலீப் கோப்பை இறுதிப்போட்டியில் 270 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.
பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்து ஐசிசி உத்தரவு
பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அந்த அணி, எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது. இதனால், பாகிஸ்தான் அணிக்கு போட்டி ஊதியத்திலிருந்து 50 சதவிகிதம் அபராதம் விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மெதுவாக பந்துவீசியதற்காக அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டதால், இந்த விவகாரத்தில் எந்தவொரு அடுத்தகட்ட விசாரணையும் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved