news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஐதராபாத் அணியின் கேப்டனாகும் இஷன் கிஷன்?
tv

Also Watch

tv

Read this

ஐதராபாத் அணியின் கேப்டனாகும் இஷன் கிஷன்?

SRH

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இஷன் கிஷன்

அபிஷேக் சர்மாவை துணை கேப்டனாகவும் வாய்ப்பு :

2027 ஐபிஎல் சீசனில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் விக்கெட் கீப்பர் இஷன் கிஷனை கேப்டனாக நியமிக்க ஐதராபாத் அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

அதேபோன்று தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவை துணை கேப்டனாக்கவும் அணி நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. 2026 ஐபில் சீசனில் SRH அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதிலும், ELIMINATOR சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறியது.

முதல் டெஸ்ட் போட்டி வெற்றி குறித்து கேப்டன் கில் பேச்சு :

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றியை பெற்ற நிலையில், வெற்றி குறித்து கேப்டன் கில் மனம் திறந்து பேசியுள்ளார்.

ஆடுகளத்தின் தன்மை எப்படி இருந்தாலும் இந்திய அணி 350 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும் என முயற்சித்ததாகவும், அதே சமயம் எதிரணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய திறன் தங்களுக்கு இருந்ததாகவும் கில் கூறினார்.

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் பயிற்சி ஆட்டம் :

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்தது.

15 ஆண்டுகளுக்கு பின் ஒருநாள் கிரிக்கெட் போட்டி :

15 ஆண்டுகளுக்கு பிறகு, ஆஸ்திரேலியாவும் வங்கதேசமும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளன. மேலும், 2-வது முறையாக ஆஸ்திரேலியா வங்கதேசத்திற்கு சென்று கிரிக்கெட் விளையாட உள்ளது. மிர்புரில் முதல் போட்டி நடைபெறுகிறது. 2-வது போட்டி, 11-ம் தேதியும், கடைசி போட்டி 14-ம் தேதியும் நடைபெறுகின்றன. தொடர்ந்து, 3 டி20 போட்டிகள் நடைபெறுகின்றன.

ஆண்களுக்கான சேலஞ்சர் கோப்பை டென்னிஸ் போட்டி :

அமெரிக்காவில் நடைபெற்ற ஆண்களுக்கான சேலஞ்சர்((CHALLENGER)) கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ராம்குமார், ரித்விக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றனர்.

இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ஜசாரி பக்ஸ் மற்றும் வாலி உடன் ராம்குமார், ரித்விக் இணை பலப்பரீட்சை நடத்தியது. இரண்டு சுற்றிலும் தலா 7க்கு 6 என்ற செட் கணக்கில் கைப்பற்றி இந்திய ஜோடி சாம்பியன் ஆனது.

Related Link
இந்திய டி20 அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி

இந்திய டி20 அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போராட்டம் வாபஸ் என சி.ஜே.பி. அறிவிப்பு

9
11 hrs 22 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau