Also Watch
Read this
By: Manigandan Raja

சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி குறித்து அணி நிர்வாகத்திடம் தான் பேசியுள்ளதாகவும், ஒருவேளை தனக்கு அந்த வாய்ப்பு வழங்கினால் மிகப்பெரிய கௌரவமாக கருதுவேன் எனவும் சிஎஸ்கே முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்தார். சென்னை அணி தனது மனதுக்கு நெருக்கமான அணி என்றும், தலைமை பயிற்சியாளர் வாய்ப்பு கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன் எனவும் அவர் கூறினார்.
ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகள்
ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக, இந்திய அணியின் முன்னாள் வீரரும், தேசிய உடற்தகுதி தேர்வு மைய தலைவருமான விவிஎஸ் லஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளார். 20ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் வரும் 19ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 4ஆம் தேதி வரை ஜப்பானின் நகோயா ((Nagoya)) நகரில் நடைபெறுகிறது.

மும்பையில் பிசிசிஐ ஆலோசனை கூட்டம்
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிசிசிஐ((BCCI)) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் பிசிசிஐ உடற்தகுதி தேர்வு மைய தலைவர் விவிஎஸ் லக்ஷ்மன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved