Also Watch
Read this
By: Manigandan Raja

VVS லக்ஷ்மனுக்கு இந்திய கிரிக்கெட் இயக்குநர் பொறுப்பு?
ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டையும் நிர்வகிக்க Director of Cricket என பொறுப்பை உருவாக்கி, வி.வி.எஸ்.லஷ்மனை அப்பொறுப்பில் நியமிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதகத் தகவல் வெளியாகியுள்ளது.
போட்டி அட்டவணை உருவாக்கம், போட்டிகளுக்கான வீரர்கள் தேர்வு என அனைத்தையும் வி.வி.எஸ்.லஷ்மன் மேற்பார்வை செய்வார் எனக் கூறப்படுகிறது.
இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட்
இந்தியா இலங்கை அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று இலங்கையின் காலே மைதானத்தில் தொடங்குகிறது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இரு அணிகளும் டெஸ்ட் போட்டியில் நேருக்கு நேர் சந்திக்கின்றன.

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் வெற்றி பெற்ற நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. காயம் காரணமாக சாய் சுதர்சன் தொடரில் இருந்து விலகிய நிலையில், தேவ்தத் படிக்கலுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டி, இரு அணிகளுக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved