news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews டெஸ்ட் கிரிக்கெட் வர்ணனையாளராக களமிறங்கும் ரஹானே
tv

Also Watch

டெஸ்ட் கிரிக்கெட் வர்ணனையாளராக களமிறங்கும் ரஹானே

சர்வதேச கிரிக்கெட்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ரஹானே

சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பிறகு புதிய அவதாரம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஜிங்கியா ரஹானே சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், வர்ணனையாளராக அவதாரம் எடுத்துள்ளார். இந்தியா - இலங்கை மோதும் டெஸ்ட் தொடரில் வர்ணனையாளராக களமிறங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 15-ம் தேதியும், 2-வது டெஸ்ட் போட்டி 28-ம் தேதியும் நடைபெற உள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் வர்ணனையாளராக ரஹானே சேர்ந்துள்ளார்.

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் சேப்பாக் அணி வெற்றி 

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியை வென்றது. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி 7 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹரிஷ் குமார் 57 ரன்கள் குவித்தார்.

தொடர்ந்து களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 16.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் ஜெகதீசன் 78 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.

Related Link
போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆறுதல்

போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆறுதல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மயக்கத்தில் உறங்கிய பெண்கள்.!

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved