news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஆர்சிபி வீரர் ஆஸ்திரேலியாவின் டிம் டேவிட் சாதனை
tv

Also Watch

tv

Read this

ஆர்சிபி வீரர் ஆஸ்திரேலியாவின் டிம் டேவிட் சாதனை

Tim David

21

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
விளையாட்டு செய்திகள் 1

இத்தாலி வீரர் லாரன்சோ மொசட்டி அதிர்ச்சி தோல்வி :

பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றில், இத்தாலி வீரர் லாரன்சோ மொசட்டி அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ஸ்பெயினில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் பிரான்ஸ்-ன் ஆர்தர் பில்ஸ் மற்றும் லாரன்சோ பலப்பரீட்சை நடத்தினர். பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ்-ன் ஆர்தர் பில்ஸ் 6க்கு 3, 6க்கு 4 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

காலிறுதி சுற்றில் ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா வெற்றி :

ஸ்டட்கார்டு மகளிர் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டிக்கு, ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா தகுதி பெற்றுள்ளார். ஜெர்மனியில் நடைபெற்று வரும் இந்த தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் போலாந்தின் இகா ஸ்வியாடெக்கும் ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவாவும் மோதினர்.

இதில் 3க்கு 6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்த மிர்ரா, அடுத்த இரண்டு செட்டுகளையும் 6க்கு 4 மற்றும் 6க்கும் 3 என்ற கணக்கில் கைப்பற்றி இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தினார்.

முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி அதிர்ச்சி தோல்வி :

இந்தியா-தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்தது. டர்பன் நகரில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை சேர்த்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்தார்.

பின்னர் 158 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் லாரா வோல்வோர்ட் 51 ரன்கள் மற்றும் அன்னேரி 44 ரன்கள் அடிக்க 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி இலக்கை எட்டியது. தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 1க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

ஆர்சிபி வீரர் ஆஸ்திரேலியாவின் டிம் டேவிட் சாதனை : 

ஐபிஎல் போட்டியில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்த 2-வது வீரர் என்கிற சாதனையே ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆர்சிபி வீரர் டிம் டேவிட் படைத்தார். ஐபிஎல் தொடரில் இதுவரை 56 போட்டிகளில் விளையாடியுள்ள டிம் டேவிட், 560 பந்துகளில் ஆயிரம் ரன்கள் எடுத்துள்ளார். ஆண்ட்ரே ரஸ்ஸல் 545 பந்துகளில் ஆயிரம் ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.

Related Link
10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி

10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தந்தை ராமதாசிடம் ஆசி பெற்றார் மகன் அன்புமணி

9
43 mins agoshare
மகனை கண்ணீருடன் கட்டித் தழுவிய ராமதாஸ்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau