Also Watch
Read this
By: Manigandan Raja

டி20 போட்டி :
சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை லீக் சுற்றில் நெதர்லாந்து அணியை 93 ரன்கள் வித்யாசத்தில் வீழ்த்தி அமெரிக்கா வெற்றிபெற்றது. டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய அமெரிக்க அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 197 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி, அமெரிக்காவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 15.5 ஓவர்களில் 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved