news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews டாப் 10-ல் இடம்பிடித்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா
tv

Also Watch

டாப் 10-ல் இடம்பிடித்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா

இந்தியர்களுக்கான தரவரிசை

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பிரக்ஞானந்தா

8-வது இடத்துக்கு முன்னேறி பிரக்ஞானந்தா அசத்தல்

செப்டம்பர் மாதத்துக்கான ஃபிடே தரவரிசை பட்டியலில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா டாப் 10-ல் இடம்பெற்றுள்ளார். அவர், 8-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

கிராண்ட் செஸ் டூர் சாம்பியன் பட்டம் வென்றதால் இந்தியர்களுக்கான தரவரிசையில் அர்ஜுன் எரிகைசியை முந்தி பிரக்ஞானந்தா முதலிடத்துக்கு முன்னேறினார். நார்வேயை சேர்ந்த மாக்னஸ் கார்ல்சென் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி

இங்கிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்ததை தொடர்ந்து, பயிற்சியாளர்கள் மற்றும் அணியின் முக்கிய வீரர்களை நீக்கி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி காட்டியுள்ளது.

ஏற்கெனவே, முகமது ரிஸ்வான், இமாம் உல் ஹக் ஆகியோரை நாடு திரும்ப கேட்டுக் கொண்ட அணி நிர்வாகம், சல்மான் ஆகா, அலி உஸ்மான், ஆமீர் ஜமால், அவைஸ் ஜாஃபர், குர்ரம் ஷேசாத் ஆகியோரை அணியில் இருந்து விடுவித்துள்ளது. மேலும், தலைமை பயிற்சியாளர் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளர்களான சர்ப்ராஸ் அகமது மற்றும் உமர் குல் ஆகியோரையும் அணியில் இருந்து நீக்கியுள்ளது.

ஜிம்பப்வேவுக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடர்

முத்தரப்பு டி20 தொடரில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நமீபியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் டாஸ் வென்று முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 185 ரன்கள் எடுத்தது.

அதிரடியாக விளையாடிய தொடக்க வீரர் லுஹான் டி பிரிடோரியஸ் 51 பந்துகளில் 94 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, 17.4 ஓவர்களில் 142 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

i10 NIOS சிறப்பு சலுகை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved