U19 கிரிக்கெட் தொடர் : 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஜிம்பாப்வேயின் ஹராரேவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 41புள்ளி 1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. Related Link தேசிய பளு தூக்குதலில் 3 தேசிய சாதனைகள்