news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews ஐபிஎல் போட்டியின் போது பாடகி ஆஷா போஷ்லேவுக்கு அஞ்சலி
tv

Also Watch

tv

Read this

ஐபிஎல் போட்டியின் போது பாடகி ஆஷா போஷ்லேவுக்கு அஞ்சலி

ஆஷா போஷ்லேவுக்கு அஞ்சலி

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
விளையாட்டு செய்திகள்

ஐபிஎல் போட்டியின் போது பாடகி ஆஷா போஷ்லேவுக்கு அஞ்சலி :

மறைந்த பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஷ்லேவுக்கு நேற்றைய ஐபிஎல் லீக் போட்டியின் போது அஞ்சலி செலுத்தப்பட்டது. மைதானத்தில் ஆர்சிபி, மும்பை அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் மட்டுமின்றி மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று ஆஷாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி :

43-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்..! சீனாவில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் சீனாவின் ஷி யூகீ ((Shi Yuqi)) 21-8, 21-10 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம், இரண்டாம் இடம் பிடித்த ஆயுஷ் ஷெட்டி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.

KKR அணிக்கு திரும்பும் வேகப்பந்து வீச்சாளர் பதிரானா :

காயம் காரணமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெறாமல் இருந்த இலங்கை வீரர் பதிரானாவுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் உடற்தகுதி சோதனை செய்து தடையில்லா சான்று வழங்கியதால், விரைவில் அணிக்கு திரும்ப இருக்கிறார். வரும் 17ஆம் தேதி அணிக்கு திரும்பும் பதிரானா, 19ஆம் தேதி நடைபெறும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களம் காண்கிறார்.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு திரும்பும் மிட்சல் ஸ்டார்க்?

தோள்பட்டையில் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்காமல் இருந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் ஸ்டார்க், விரைவில் அணிக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் 11.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட ஸ்டார்க், அணிக்கு முக்கிய பங்கேற்றுவார் என டெல்லி அணி நிர்வாகம் நம்பியுள்ளது.

Related Link
மும்பை அணியை பந்தாடியது பெங்களூரு அணி

மும்பை அணியை பந்தாடியது பெங்களூரு அணி





SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் ஆதரிப்பது ஏற்புடையதல்ல - இபிஎஸ் பேச்சு

4
11 mins agoshare
முதல்வர் ஆதரிப்பது ஏற்புடையதல்ல - இபிஎஸ் பேச்சுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved