news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ஸ்வரேவ் அபாரம்
tv

Also Watch

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ஸ்வரேவ் அபாரம்

அலெக்சாண்டர் பப்ளி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tennis

கஜகஸ்தான் வீரரை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக்கை எதிர்கொண்ட அவர், முதல் செட்டை 7-க்கு 6 என போராடி வென்றார்.

இதற்கு பதிலடியாக பப்ளிக் 6-க்கு 4 என 2-வது செட்டை கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டில் ஸ்வரேவ் 7-க்கு 6 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். பிரான்ஸ் வீரர் ஆர்தர் ஜியா, ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் ஆகியோரும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் பிவி.சிந்து தோல்வி

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் அடுத்த சுற்றுக்கு இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா முன்னேறியுள்ளார். பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஜப்பானின் நட்சுகி நிடாரியாவை எதிர்கொண்ட அவர், 21-க்கு 17, 16-க்கு 21, 21-க்கு 19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

அதேசமயம், தென் கொரியாவின் அன்சே யங்கை எதிர்கொண்ட பி.வி.சிந்து போராடி தோல்வி அடைந்தார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

டெல்லி கேபிடல்ஸ் அணியில் மீண்டும் யுவராஜ் சிங்

டெல்லி கேபிடல்ஸ் அணியின் உதவி மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். 44 வயதாகும் யுவராஜ் சிங், இந்திய அணிக்காக 304 ஒருநாள், 40 டெஸ்ட் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இந்திய அணிக்காக பல உலக கோப்பைகளை வென்றுள்ள இவருக்கு, ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் அதிகமாக உள்ளது. ஒரு வீரராகவும் ஆலோகராகவும் மிகுந்த அனுபவம் கொண்ட யுவராஜ் சிங் முதல் முறையாக பயிற்சியாளராக செயல்படவுள்ளார்.

Related Link
அச்சுறுத்தலுக்கு மத்தியில் வெற்றி பெற்ற அல்-நஸ்ர் அணி

அச்சுறுத்தலுக்கு மத்தியில் வெற்றி பெற்ற அல்-நஸ்ர் அணி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

MG-ன் மெகா அறிமுகம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved