Also Watch
Read this
சமூக வலைதளங்களில், கோழிக்கால் சாப்பிடுவதால் skin collagen அதிகமாகும், தோலுக்கு நல்லது என்றெல்லாம், trend ஆகி வருகிறது. உண்மையிலேயெ கோழிக்கால் சாப்பிடலாமா? யாரெல்லாம் இதனை எடுத்துக் கொள்ளலாம். மருத்துவர்கள் என்ன சொல்கின்றனர்?

கழிவுப்பொருள் தானே...
பலரும் கோழிக் கால்களை ஒரு கழிவுப் பொருளாக நினைத்து ஒதுக்கித் தள்ளினாலும், இதில் உடலுக்கு நன்மை சேர்க்கும் ஏராளமான Nutrients நிறைந்து உள்ளன. ஆசியா, மெக்சிகோ போன்ற உலகின் பல பகுதிகளில் இது ஒரு முக்கிய உணவாகவே விரும்பிச் சாப்பிடப்படுவதாக கூறப்படுகிறது. அதனால், தாராளமாக கோழிக்கால்களை சாப்பிடலாம் என்று, மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மூட்டு வலி வராது...
கோழிக்கால்களில், சுமாராக 70% கொலாஜன் மட்டுமே உள்ளது. ஆனால், கோழிக்கறி உடன் ஒப்பிடும் போது, கோழிக் கால்களில் அதிக collagen இருக்கிறதாம். இது சரும சுருக்கங்களை நீக்கி, இளமையாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறதாம்.
இதில் உள்ள கொலாஜன் மற்றும் ஜெலட்டின், மூட்டுகளின் தேய்மானத்தை குறைத்து மூட்டு வலி வராமல் தடுக்கிறதாம். மேலும், இதில் உள்ள கிளைசீன், ப்ரோலீன் போன்ற அமினோ அமிலங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

என்னென்ன சத்துக்கள்?
இரண்டு கோழிக் கால்களில் 70 கிராம் அளவு collagen, சுமார் 14 கிராம் புரதம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் B9 (ஃபோலேட்) ஆகிய சத்துக்கள் உள்ளன.

சமைக்கும் போது...
இதை எப்படி சமைக்க வேண்டும் என்பது தான் முக்கியமே. இதனை, deep fry செய்யாமல், சூப் ஆக வைத்து சாப்பிடும்போது உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் தருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனை நன்றாக சுத்தம் செய்வதும், வேக வைப்பதும் மிகவும் அவசியம். ஏன் என்றால், சரியாக வேக வைக்காத கோழிக்கால்களில், சால்மோனெல்லா போன்ற பாக்டீரியா இருக்கக்கூடும். எனவே, குக்கரில் நன்றாக விசில் விட்டு, வேக வைப்பது பாதுகாப்பானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

யார் யார் சாப்பிடக்கூடாது?
கோழிக்காலில் கொலாஜன் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்திருந்தாலும், அதில் கொழுப்பு மற்றும் சில குறிப்பிட்ட chemicals அதிகமாக உள்ளன. இதனால் இதய நோய், உடல் பருமன் மற்றும் யூரிக் அமிலம் பிரச்சனை உள்ளவர்கள் கோழிக்காலைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் அல்லது மருத்துவரின் ஆலோசனைப்படி மிகவும் அளவாகச் சாப்பிட வேண்டும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.