Also Watch
Read this
By: Manigandan Raja

எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல் அஜிஸ் பின் சல்மான் தகவல்
மதீனா பகுதியில் 11 கோடி டன் யுரேனியம் செறிந்த தாது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய அந்நாட்டின் எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல் அஜிஸ் பின் சல்மான், மதீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி மற்றும் புவியியல் ஆய்வுகள் வாயிலாக சுமார் 11 கோடி டன் தாதுக்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும்.
குறிப்பாக அரிய வகை கனிமங்கள் மற்றும் நம்பிக்கையூட்டும் வகையில் யுரேனியம் செறிவுகள் இருப்பது தெரியவந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மசூத் அசார் குறித்து தகவல் அளித்தால் ரூ.24 லட்சம் பரிசு
மசூத் அஸார் குறித்து தகவல் அளித்தால் 24 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என சன்மானத்தை உயர்த்தி பாகிஸ்தான் அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மும்பை தாக்குதல் குற்றவாளியும், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் நிறுவனருமான மசூத் அசாரை ஐ.நா. பாதுகாப்பு சபை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு இவனை தேடப்படும் குற்றவாளியாக பாகிஸ்தான் புலனாய்வு பிரிவு அறிவித்தது. மேலும், இவனை பற்றி தகவல் அளித்தால் 17.20 லட்சம் ரூபாய் வெகுமதி அளிப்பதாகவும் தெரிவித்திருந்தது.
தேசிய நெடுஞ்சாலையில் விபத்து: 21 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
தென்னாப்பிரிக்காவில் அடுத்தடுத்து பல வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேற்கு கேப் மாகாணம் பிரின்ஸ் ஆல்பர்ட் மற்றும் லியு கம்கா நகர் இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து, எதிரேவந்த மற்றொரு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளாது.
இதன் தொடர்ச்சியாக, பின்னால் வந்த மற்ற வாகனங்களும் அடுத்தடுத்து மோதி தொடர் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்த நிலையில், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved