news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews மலையின் மீது ஹெலிகாப்டர் மோதியதில் 7 பேர் பரிதாப பலி
tv

Also Watch

மலையின் மீது ஹெலிகாப்டர் மோதியதில் 7 பேர் பரிதாப பலி

கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஹெலிகாப்டர்   விபத்து

தேசிய பூங்காவை ஹெலிகாப்டரில் சுற்றி பார்த்தபோது சோகம்

கென்யாவில் மலையின் மீது ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானதில் அமெரிக்காவை சேர்ந்த 5 சுற்றுலா பயணிகள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கென்யாவின் லைசபா பகுதியில் உள்ள தேசிய பூங்காவை சுற்றி பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் 6 பேர் மற்றும் ஒரு விமானி என மொத்தம் 7 பேர் ஹெலிகாப்டரில் சென்றனர்.

ஹெலாக்வா மலைப்பகுதியில் பறந்தபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் மலை மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டர் தீப்பற்றி எரிந்ததில் 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

லாரி மீது பயங்கரமாக மோதிய பேருந்து: 23 பேர் உயிரிழப்பு

பிரேசில் நாட்டில் லாரி மீது பேருந்து மோதியதில் 2 குழந்தைகள் உட்பட 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பரானா மாகாணம் லிபிடுவா நகரில் இருந்து பண்டா கிராசா நகருக்கு 28 பயணிகளுடன் பேருந்து சென்றது.

பரானா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 23 பேர் உயிரிழந்த நிலையில், 5 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Related Link
அமெரிக்கா மோதலை விரிவுபடுத்தினால் ஈரான் புதிய திட்டம்

அமெரிக்கா மோதலை விரிவுபடுத்தினால் ஈரான் புதிய திட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மலையின் மீது ஹெலிகாப்டர் மோதியதில் 7 பேர் பரிதாப பலி

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved