சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி அதிர்ச்சி, பரபரப்பு
ஏமன் அரசு படைகளின் கவச வாகனம் சரணடைந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது ஏறிச் சென்றதாக கூறப்படும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏமன் ராணுவம் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக "டான் ஆஃப் ஏமன்" என்ற பெரிய அளவிலான எதிர் தாக்குதலை தொடங்கியுள்ளது.
இந்த தாக்குதலின்போது, பாப் எல்-மண்டேப் நீரிணை பகுதியில் காயமடைந்து தரையில் விழுந்து கிடந்த மற்றும் கைகளை உயர்த்தி சரணடைந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது ராணுவத்தின் கவச வாகனம் ஏறிச் சென்றது.
மாநில தேர்தலில் வலதுசாரி அமைப்பான ஏஎஃப்டி கட்சி வெற்றி
ஜெர்மனியின் கிழக்கு மாகாணமான சாக்சோனி - அன்ஹால்ட் பகுதியில் நடைபெற்ற மாநில தேர்தலில் வலதுசாரி அமைப்பான ஏ.எஃப்.டி. கட்சி 44 சதவீத வாக்குகளை பெற்று மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்த கட்சியின் டோபியாஸ் ரௌஷ் மாநில நாடாளுமன்ற சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜெர்மனி வரலாற்றில் தீவிர வலதுசாரி அமைப்பை சேர்ந்த ஒருவர் இந்த உயரிய பதவியை ஏற்பது இதுவே முதல்முறை. இந்த வலதுசாரி எழுச்சியால் ஜெர்மனியின் தற்போதைய அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் தலைமையிலான அரசுக்கு மிகப்பெரிய அரசியல் சவாலாக மாறியுள்ளது.