Also Watch
Read this
By: Manigandan Raja

இரு விமானங்களையும் இடைமறித்த F-16 போர் விமானங்கள்
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கோல்ஃப் மைதானத்திற்கு மேலே, தடை செய்யப்பட்ட வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்த 2 சிவில் விமானங்களை F-16 ரக போர் விமானங்கள் இடைமறித்த வீடியோ வெளியாகியுள்ளது.
நியூ ஜெர்சியின் பெட்மின்ஸ்டர் ((Bedminster)) பகுதியில் அமைந்துள்ள தனது கோல்ஃப் மைதானத்தில், அதிபர் ட்ரம்ப் ஒரு போட்டியை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த போது, அந்த பகுதிக்கு மேல் தடைசெய்யப்பட்ட வான்வெளிக்குள் 2 சிவில் விமானங்கள் நுழைந்தன.
அதிபரின் பாதுகாப்பு கருதி அவற்றை F-16 போர் விமானங்கள் இடைமறித்ததாக வட அமெரிக்க வான்வெளி பாதுகாப்பு கட்டளை மையம் ((NORAD)) தெரிவித்துள்ளது.
டிரம்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த இஸ்ரேல்
காசா போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்வைத்துள்ள 15 அம்ச திட்டத்தை ஏற்க முடியாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், காசாவுடன் எந்தவிதமான சமரசத்தையும் ஏற்கும் நிலையில் இஸ்ரேல் இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
அதேநேரத்தில், டிரம்ப் நிர்வாகத்தின் அழுத்தத்தைத் தொடர்ந்து காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்களை வெகுவாக குறைத்துள்ளது. வரும் அக்டோபர் 27ஆம் தேதி இஸ்ரேலில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நெதன்யாகு உள்நாட்டு அரசியல் அழுத்தத்தையும் எதிர்கொண்டு வருகிறார்.
மின்சார தட்டுப்பாட்டை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்
ஈராக்கின் குட் ((Kut)) நகரில் மின்சார தட்டுப்பாட்டை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. ஏற்கனவே வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், சீரற்ற மின்சார விநியோகத்தால் கடும் சிரமத்துக்குள்ளான மக்கள், வாசித் ((Wasit)) மாகாண சபைக்கு எதிரே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதற்றமான சூழல் ஏற்பட்டதால், கூடுதல் மின்சாரம் விநியோகிக்க கோரி முழக்கமிட்டவர்களை. பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி விரட்டி அடித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved