news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஈரானுடன் ஒப்பந்தமா அல்லது நரகத்துக்கு அனுப்புவதா?
tv

Also Watch

ஈரானுடன் ஒப்பந்தமா அல்லது நரகத்துக்கு அனுப்புவதா?

ஐநா சபை

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph

ஐநா பொதுச்சபை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி

அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் முடிந்த பிறகு ஈரானுடனான போரை முடிவுக்கு கொண்டுவரும் ஒப்பந்தம் செய்யப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் ஐநா சபையின் உயர்மட்டக் கூட்டத்தை துவக்கி வைத்து பேசிய அவர், ஈரானுக்கு எதிராக மிகமுக்கியமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தாம் உள்ளதாகவும்.

ஈரானுடன் ஒப்பந்தம் செய்வதா அல்லது முழுவதும் நசுக்கி இந்த உலகை காப்பாற்ற அவர்களை நரகத்துக்கு அனுப்ப வேண்டுமா? என கூறினார். மேலும், கடைசியாக அமைதியின் வழிக்கு திரும்ப ஈரானுக்கு ஒரு வாய்ப்பு தரலாம் என நினைப்பதாக கூறினார்.

7 நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை திறக்க தயார்

அமெரிக்கா தனது ராணுவ முற்றுகையை நீக்கினால், 7 நாள்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை திறக்க தயாராக உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இன்று முதல் ஈரானின் விமான போக்குவரத்து சேவையை முடக்கப்போவதாக அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த சூழலில், ராய்ட்டர்ஸ் மற்றும் ஜப்பானின் கியோடோ செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்தியில், ஹோர்முஸ் நீரிணையை திறக்க தயாராக உள்ளதாக பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான்

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை தனது முயற்சியால் தடுத்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தம்பட்டம் அடித்துள்ளார். ஐநா சபையின் பொதுப்பேரவைக் கூட்டத்தில் பேசிய அவர், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலை தடுத்த பெருமை தனக்கே உரியது எனவும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் சிறந்த மனிதர் எனவும் வர்ணித்தார்.

மேலும், இந்தியாவுடனான போரை தடுத்து நிறுத்தியதன் மூலம் கோடிக்கணக்கான உயிர்களை காப்பாற்றியதற்காக தனக்கு பாகிஸ்தான் பிரதமர் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்ததாக கூறினார்.

Related Link
ராமேஸ்வரம் மீனவர்களை விடுவித்த இலங்கை நீதிமன்றம்

ராமேஸ்வரம் மீனவர்களை விடுவித்த இலங்கை நீதிமன்றம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம் கண்ட ஷஃபாலி வர்மா

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved