news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews இஸ்ரேலின் E1 குடியேற்றத் திட்டத்திற்கு E4 நாடுகள் கண்டனம்
tv

Also Watch

இஸ்ரேலின் E1 குடியேற்றத் திட்டத்திற்கு E4 நாடுகள் கண்டனம்

புதிய வீடு

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இஸ்ரேலின் திட்டம்

யூதர்களுக்கான புதிய வீடுகளைக் கட்டும் இஸ்ரேலின் திட்டம்

இஸ்ரேலின் E1 குடியேற்றத் திட்டத்திற்கு E4 நாடுகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. அதாவது, மேற்குக் கரையில் உள்ள ஜெருசலேம் நகருக்கு கிழக்கே உள்ள சுமார் 12 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான நிலத்தில் யூதர்களுக்கான ஆயிரக்கணக்கான புதிய வீடுகளைக் கட்டும் இந்த திட்டத்திற்கு, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, மற்றும் இத்தாலி ஆகிய நான்கு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார கட்டுப்பாடுகளை சுட்டிக்காட்டியுள்ள E4 நாடுகள், இந்த நேரத்தில் விரிவாக்க நடவடிக்கை என்பது கவலை ஏற்படுத்துவதாக உள்ளது என தெரிவித்துள்ளது.

அலாஸ்காவில் விபத்தில் சிக்கிய சார்டர் விமானம்

மேற்கு அமெரிக்காவின் அலாஸ்காவின் சார்டர் (Charter) விமானம் விபத்துக்குள்ளானதில் பயணிகள் 8பேரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆங்கரேஜில்(Anchorage) இருந்து 2 விமானிகள் மற்றும் 6 பயணிகள் என 8 பேருடன் புறப்பட்ட விமானம் அலாஸ்காவின் தொலைதூர ரேடார் நிலையம் அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் விபத்துக்கான காரணங்களை கண்டறிய விமான போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள் தகவல்களை திரட்டி வருகின்றனர்.

நைஜீரியாவில் படகு கவிழ்ந்த விபத்தில் சுமார் 50 பேர் பலி

நைஜீரியாவில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் நீரில் மூழ்கி சுமார் 50 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. கோரோன்யோ மாவட்டத்தில் உள்ள கோராவ் கிராமத்தைச் சேர்ந்த பலர், ஆற்றின் மறுகரையில் உள்ள பண்ணைக்குச் செல்லும்போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகில் இருந்த 80பேரில் காணாமல் போன் சிலரை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

Related Link
ஈரானுக்கு உதவும் நாடுகளுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

ஈரானுக்கு உதவும் நாடுகளுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆப்பிளின் iPhone 18 Pro மாடல்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved