ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 4 புள்ளி 9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, அதிகாலை சுமார் 2 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 220 கிலோ மீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த உடனடி தகவல்கள் வெளியாகவில்லை.
சந்திரனுக்கான அணு உலைகளை உருவாக்குவதில் போட்டி
எதிர்கால விண்வெளி ஆய்வுகளுக்கு தயாராகும் வகையில், அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் சந்திரனுக்கான அணு உலைகளை உருவாக்குவதில் போட்டியில் இறங்கியுள்ளன. பராமரிப்பின்றி இயங்கக்கூடிய ஒரு அணு உலையை தயார் செய்யுமாறு நாசா ஆகஸ்ட் மாதம் ஒப்பந்ததாரர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
ரஷ்யாவோ, செலினா என்று அழைக்கப்படும் ஒரு சந்திர அணு உலையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.