Also Watch
Read this
By: Manigandan Raja

சொந்த மண்ணிலிருந்து செயற்கைக்கோள்களை ஏவி சாதனை
ஐரோப்பிய மண்ணில் இருந்து முதல்முறையாக ஆர்பிட்டல் ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவி ஜெர்மனியின் ISAR AEROSPACE நிறுவனம் சாதனைப் படைத்துள்ளது. நார்வேயில் உள்ள ANDOEYA விண்வெளி தளத்திலிருந்து 5 சிறிய செயற்கைக்கோள்களுடன் இந்த ராக்கெட் ஏவப்பட்டது. ஐரோப்பிய கண்டப் பகுதியில் இருந்து சுற்றுப்பாதையை அடைந்த முதல் ராக்கெட் இதுவாகும்.
ஈரானுக்கு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் எச்சரிக்கை
அமெரிக்க கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் எண்ணெய் கப்பல்கள் அனைத்தும் அமெரிக்காவால் மூழ்கடிக்கப்படும் என்று அந்நாட்டு பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் ((Pete Hegseth)) எச்சரித்துள்ளார்.

மேலும் ஈரான் செய்ய வேண்டியதெல்லாம் அமெரிக்கக் கடற்படையை நோக்கி தாக்குதல் நடத்தாமல் இருப்பது மட்டுமே என்றும் தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தூதர்கள் இருவர் ரஷ்ய அதிபர் புதினுடன் சந்திப்பு
மாஸ்கோ - கீவ் இடையே முடங்கிப் போன போர்நிறுத்த அமைதி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கும் வகையில், அமெரிக்கத் தூதர்களான ஸ்டீவ் விட்காஃப் ((Steve Witkoff)) மற்றும் ஜாரெட் குஷ்னர் ((Jared Kushner)) ஆகியோர், ரஷ்ய அதிபர் புதினை கிரெம்ளின் மாளிகையில் சந்தித்து பேசினர்.

சுமார் 3 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின் போது, ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முயற்சிகளுக்கு புதின் பாராட்டு தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved