நேபாளத்தில் கோர்க்கா மாவட்டத்தில் புத்தி கண்டகி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 10 பேர் காணாமல் போயினர். மேலும், 6 பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. சும்னுப்ரி பகுதியில் சுமார் 35-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
தீபாவளியை முன்னிட்டு சிங்கப்பூரில் ரயில்கள், பேருந்துகள் மற்றும் மெட்ரோ நிலையங்கள் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. யானைகள், பாரம்பரிய விளக்குகள், ரங்கோலி கோலங்கள் இடம்பெற்றுள்ள இந்த அலங்காரங்கள், அக்டோபர் 8 முதல் நவம்பர் 11 வரை பொதுமக்களைக் கவரும் வகையில் காட்சியளிக்கும்.