Also Watch
Read this
By: Web Team

ஊழல் வழக்கில் அர்ஜெண்டினா முன்னாள் அதிபருக்கு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த தீர்ப்பை எதிர்த்து ஊர்வலம் சென்ற அவரது ஆதரவாளர்கள் தனியார் தொலைகாட்சி நிலையத்தை அடித்து நொறுக்கியதால் பதற்றம் ஏற்பட்டது.
72 வயதான முன்னாள் அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கிர்ச்னருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பளித்த நீதிபதிகள் தங்களை விட உயர்ந்த இடத்தில் இருப்பவர்களின் கைப்பாவையாக இருப்பதாக கிரிச்னர் குற்றம் சாட்டியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved