Also Watch
Read this
By: Manigandan Raja

100 மில்லியன் பேரல் எண்ணெய் கையிருப்பு வெளியிட முடிவு
உலகளாவிய எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள கடும் விலை உயர்வை கட்டுப்படுத்த ஜி-7 நாடுகள் ஒருங்கிணைந்த அவசர நடவடிக்கைகளை அறிவித்துள்ளன. சர்வதேச எரிசக்தி முகமை மூலம் அவசர எண்ணெய் கையிருப்பிலிருந்து 100 மில்லியன் பேரல்கள், அடுத்த 4 மாதங்களில் ஒருங்கிணைந்து வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், டீசல் விநியோகம் மற்றும் விலையை நிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜி-7 தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் மையங்கள் மீது உக்ரைன் தாக்குதல்
ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் கட்டமைப்புகள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. வோல்கோகிராடில் உள்ள லுக் ஆயில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சமாரா பிராந்தியத்தில் உள்ள முக்கிய எண்ணெய் பம்பிங் மையம் தாக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இரு இடங்களிலும் தீ ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், சேதத்தின் முழு விவரம் மதிப்பிடப்பட்டு வருவதாக உக்ரைன் கூறியுள்ளது.
ஐரோப்பா டீசல் கையிருப்பை வெளியிட ஒப்புதல்- டிரம்ப்
உலகளாவிய விநியோகத் தடைகளால் எரிபொருள் விலை உயர்ந்து வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகள் தங்களின் அதிகளவு கையிருப்பில் உள்ள டீசலை வெளியிட ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டீசல் கையிருப்பு வெளியிடும் நடவடிக்கை உடனடியாக தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்காவிலும் டீசல் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து பரிசீலனை நடைபெற்று வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved