news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு கிரீன்லாந்து பிரதமர் பதிலடி
tv

Also Watch

tv

Read this

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு கிரீன்லாந்து பிரதமர் பதிலடி

Greenland

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
உலக செய்திகள் 1

எலிசபெத் ராணி ஆடை, அணிகலன்கள் காட்சிக்காக வைப்பு :

பிரிட்டனில் மறைந்த இரண்டாம் எலிசபெத் ராணி பயன்படுத்திய ஆடை மற்றும் அணிகலன்கள் பக்கிங்ஹாம் அரண்மனையில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கடந்த 1956ஆம் ஆண்டு பிறந்த எலிசபெத், மகாராணியாக வாழ்ந்தபோது அணிந்திருந்த நெக்ளஸ் முதல் மகுடங்கள் வரை அனைத்து பொருட்களும் பொதுமக்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

மேலும், அவர் டிசைன் டிசைனாக பயன்படுத்திய கேப்களும் வைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 21ஆம் தேதி அவரது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு இக்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சனிக்கிழமை பூமியில் தரையிறங்கும் ஆர்டெமிஸ்-2 குழு : 

நிலவை சுற்றிப் பார்த்து விட்டு பூமிக்கு திரும்பி வரும் விண்வெளி வீரர்கள், இந்திய நேரப்படி சனிக்கிழமை காலை 5 மணியளவில் பசிபிக் கடற்கரை பகுதியில் தரையிறங்குவார்கள் என நாசா அறிவித்துள்ளது..!

53 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்டெமிஸ் 2 திட்டத்தின் கீழ் நிலவை நோக்கி பயணித்த 4 பேர் கொண்ட நாசா குழு, நிலவை பின்புறத்தில் இருந்து பார்த்தவர்கள் உள்ளிட்ட பல சாதனைகளை படைத்தது. பின்னர் சில ஆய்வுகளை மேற்கொண்ட குழு, ஓரியன் விண்கலம் மூலம் மீண்டும் பூமியை நோக்கிய பயணத்தை தொடங்கியது. இதையடுத்து அவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணியை கடற்படையுடன் இணைந்து நாசா மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு கிரீன்லாந்து பிரதமர் பதிலடி :

கைப்பற்றுவதற்கு கிரீன்லாந்து ஒன்றும் வெறும் பனிக்கட்டி துண்டு அல்ல என்றும், 57 ஆயிரம் மக்களை கொண்ட பெருமை மிகு தேசம் எனவும், அந்நாட்டு பிரதமர் ஜென்ஸ் பிரெட்ரிக் நீல்சன் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

ஈரானுடனான போரில் உதவி செய்யாத நேட்டோ நாடுகளுக்கு கடும் அதிருப்தி தெரிவித்த ட்ரம்ப், கிரீன்லாந்தை நினைவில் கொள்ளுங்கள் என எச்சரித்தார். அதற்கு பதிலடி கொடுத்துள்ள கிரீன்லாந்து பிரதமர், இரண்டாம் உலக போருக்கு பிறகு கட்டமைக்கப்பட்ட, தாங்கள் மதிக்கும் பாதுகாப்பு கூட்டணி, அனைத்து தரப்பினராலும் மதிக்கப்படும் சர்வதேச சட்டங்களை கொண்ட, உலக சமுதாயத்தை பாதுகாப்பதே தங்களுக்கு முக்கியம் என தெரிவித்துள்ளார்.

"கப்பல்களுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்துங்கள்" :

ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் கட்டணம் வசூல் செய்வதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்..! ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கட்டணம் வசூல் செய்வதை ஈரான் இத்தோடு நிறுத்திக் கொள்வது அவர்களுக்கு நல்லது என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.

அடுத்த சில நிமிடங்களில் மற்றொரு பதிவை வெளியிட்ட டிரம்ப், உலகின் முக்கிய கடல் வழிப் போக்குவரத்து பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மிக மோசமாக கையாண்டு வருவதாக விமர்சித்துள்ளார்.

Related Link
உக்ரைனுக்கு எதிராக 2 நாள் போர் நிறுத்தம் அறிவித்த ரஷ்யா

உக்ரைனுக்கு எதிராக 2 நாள் போர் நிறுத்தம் அறிவித்த ரஷ்யா




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் ஆதரிப்பது ஏற்புடையதல்ல - இபிஎஸ் பேச்சு

0
3 mins agoshare
முதல்வர் ஆதரிப்பது ஏற்புடையதல்ல - இபிஎஸ் பேச்சுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved