Also Watch
Read this
By: Manigandan Raja

பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி அறிவிப்பு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறையிலிருந்து விடுவிக்கக் கோரி அவரது கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் சார்பில் வரும் 27ஆம் நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் கடந்த 2023 ஆண்டு இம்ரான் கான் கைது செய்யப்பட்டு அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.
சிரியாவில் தீவிரமடைந்து வரும் உள்நாட்டு போர்
சிரியாவில் உள்நாட்டு போர் தீவிரமடைந்து வரும் நிலையில், AL-EIS SOUTH OF ALEPPO உள்ளிட்ட பகுதிகளில் உள்ளி ராணுவ தளங்களில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் படுகாயமடைந்ததாக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

நீண்ட நாட்களாகவே சிரியாவில் அரசுக்கும் மற்றும் ஆயுதக் குழுக்களுக்குமிடையே உள்நாட்டு போர் நீடித்து வருகிறது. கடந்த 3 வாரங்களில் நடைபெற்ற தாக்குதல்களில் 30 பேர் கொல்லப்பட்டதாகவும், 29 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் போர் நிறுத்தம் - ஈரான் நிபந்தனை
மத்திய கிழக்கில் போர் முடிவுக்கு வர வேண்டுமென்றால் ஈரானின் முடக்கப்பட்ட 100 பில்லியன் டாலர் நிதியை அமெரிக்கா விடுவிக்க வேண்டும் மற்றும் ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் கடற்படை முற்றுகையை விலக்கிக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளது.

அதேபோன்று தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை ஹோர்மூஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டே இருக்கும் எனவும் ஈரான் எச்சரித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved