news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews டிரம்ப்பின் பேச்சுக்குப் ஈரான் அமைச்சர் பதிலடி
tv

Also Watch

டிரம்ப்பின் பேச்சுக்குப் ஈரான் அமைச்சர் பதிலடி

ஹோர்முஸ் நீரிணை ஈரானைச் சேர்ந்தது

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Iran

ஹோர்முஸ் நீரிணை ஈரான் உத்தரவுக்கு மட்டுமே திறக்கும்

ஹோர்முஸ் நீரிணை, ஈரானின் உத்தரவுப்படி மட்டுமே திறக்கப்படும் என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நீரிணையை கைப்பற்றி, அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் போவதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.

அதிபர் டிரம்ப்பின் பேச்சுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபாதி,ஹோர்முஸ் நீரிணை ஈரானைச் சேர்ந்தது, ஈரானிடம் உள்ளது, ஈரானிடமே நிலைத்திருக்கும் என தெரிவித்தார்.மேலும் டிரம்ப் தனது தோல்வியை ஏற்று கற்பனைகளைக் கைவிடும் வரையில் ஈரான் நீரிணை முடக்கத்தைத் தொடரும் என துணை வெளியுறவு அமைச்சர் கூறினார்.

இந்தோனேசியாவின் ஃப்ளோரஸ் தீவு அருகே ஏற்பட்ட நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் ஃப்ளோரஸ் தீவு அருகே 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர் கட்டடங்கள் இடிந்து விழுந்ததுடன், நிலச்சரிவும் ஏற்பட்டதாகவும், கடலோர பகுதிகளில் சிறிய சுனாமி அலைகளும் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவின் விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மாணவர் உள்பட 5 பேர் காயமடைந்தனர். துபாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்களில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Related Link
விமான நிலைய கட்டுப்பாட்டாளர் செயலால் பெரும் விபத்து தவிர்ப்பு

விமான நிலைய கட்டுப்பாட்டாளர் செயலால் பெரும் விபத்து தவிர்ப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வடகொரிய தலைவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த டிரம்ப்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved