news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஹோர்முஸில் வணிக கப்பல்களை குறிவைத்து புதிய தாக்குதல்
tv

Also Watch

ஹோர்முஸில் வணிக கப்பல்களை குறிவைத்து புதிய தாக்குதல்

சர்வதேச ஊடகங்கள்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Harmoz

அமெரிக்க இடைக்கால தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த ஈரான் பிளான்

  • அமெரிக்க இடைக்கால தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த ஈரான் புதிய பிளானை கடைப்பிடித்து வருகிறது. அதாவது, கச்சா எண்ணெய் விலையை உயர்த்தும் நோக்கில், ஹோர்முஸ் நீரிணை பகுதியில் வணிகக் கப்பல்களை இலக்கு வைத்து புதிய உத்திகளுடன் தாக்குதலை தீவிரப்படுத்தி வருவதாக மூத்த ஈரானிய அதிகாரிகள் மற்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
  • நவம்பரில் நடைபெற உள்ள தேர்தலுக்கு முன்னதாக அதிபர் டிரம்புக்கு அரசியல் ரீதியான அழுத்தத்தை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாக கூறப்படுகிறது.

ஹோர்முஸில் கண்ணிவெடியில் மோதி மூழ்கிய சரக்குக் கப்பல்

  • ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடியில் மோதி சரக்குக் கப்பல் ஒன்று மூழ்கியதாக ஈரான் புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது. ஈரானின் அனுமதியின்றி சட்டவிரோதமான பாதையில், 2,500 கண்டெய்னர்களை ஏற்றிக் கொண்டு அந்த சரக்குக் கப்பல் செல்ல முயன்றதாகவும், அப்போது அங்குள்ள கண்ணிவெடியில் மோதி தீப்பிடித்து கடலில் மூழ்கியதாகவும் தெரிவித்துள்ளது.
  • இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கப்பல் மற்றும் மாலுமிகளின் நிலை குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.

பாகிஸ்தான் விமானிகளுக்கு ஏர் பிரான்ஸ் தடை

  • பாகிஸ்தானை சேர்ந்த விமானிகள், இஸ்ரேலுக்கு செல்லும் விமானங்களை இயக்க ஏர் பிரான்ஸ் நிறுவனம் தடை விதித்துள்ளது. அதேபோல, சிகோகோவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் யுனைட்டைட் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இதனை பின்பற்ற முடிவு செய்துள்ளது. மேலும், ஏமன் உள்ளிட்ட 32 நாடுகளை சேர்ந்த விமானிகளுக்கு இஸ்ரேலுக்கு செல்லும் விமானங்களுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
  • ஃபிளைதுபாய் விமான கடத்தல் முயற்சிக்கு முன்னரே இந்த தடை இருந்தாலும், இது உறுதியாக பின்பற்றவில்லை. மீண்டும் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடக்காமல் இருப்பதற்கு இந்த விதிகளை இஸ்ரேல் கடுமையாக்கி உள்ளது.


Related Link
ஆஸ்திரேலிய கடற்படைக் கப்பலில் ரகசிய கேமரா கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலிய கடற்படைக் கப்பலில் ரகசிய கேமரா கண்டுபிடிப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தின் ஆளுநராக ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் பொறுப்பேற்பு

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved