Also Watch
Read this
By: Manigandan Raja

தென் கொரியா, அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சிக்கு எதிர்ப்பு
வட கொரியா இன்று காலை கடலைநோக்கி பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை ஏவி சோதனை நடத்தியதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சந்தேகத்திற்கிடமான ஆயுதம் கடலில் விழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தென் கொரிய ராணுவத்தை மேற்கோள் காட்டி, வட கொரியா தனது கிழக்கு கடற்கரைக்கு அப்பால் அடையாளம் தெரியாத ஏவுகணை ஒன்றை சுட்டதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏரியில் படகு கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழப்பு
ஜிம்பாப்வேயில் ஏரியில் படகு கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்த நிலையில், 27 பேர் மாயமாகியுள்ளனர். கரிபா ஏரியில் அதிக பயணிகளை ஏற்றி சென்ற படகு பாரம் தாங்காமல் திடீரென கவிழ்ந்ததில் 77 பேர் மீட்கப்பட்டு அப்பகுதியில் உள்ள ஒரு தீவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
90 பேர் மட்டுமே பயணிக்கக் கூடிய இந்த படகில், 114 பயணிகளும் 5 பணியாளர்களும் இருந்துள்ளனர்.
ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறவுள்ள முழு சூரிய கிரகணம்
ஐரோப்பிய கண்டத்தில் 1999ஆம் ஆண்டுக்கு பிறகு நிகழவுள்ள முழுமையான சூரிய கிரகணம் இன்று நடைபெறவுள்ளது.

கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யாவின் வட பகுதி, அட்லாண்டிக் பெருங்கடல், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலின் சில பகுதிகளில் முழுமையான சூரிய கிரகணமும், அமெரிக்காவின் வடகிழக்கு பகுதிகள், கனடா, ஐரோப்பாவின் மற்றும் வடமேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பகுதி கிரகணமாகவும் தெரியும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved