news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews போர்களில் மனித உருவ ரோபோக்களை பயன்படுத்த திட்டம்
tv

Also Watch

போர்களில் மனித உருவ ரோபோக்களை பயன்படுத்த திட்டம்

சீனா

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மனித உருவ ரோபோ

ஆராய்ச்சிகளை துரிதப்படுத்துமாறு வல்லுனர்களுக்கு உத்தரவு

போர்களில் மனித உருவ ரோபோக்களை பயன்படுத்த சீனா தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த மாதம் சீனாவில் நடைபெற்ற உலக மனித உருவ ரோபோ விளையாட்டு போட்டிகளில் ரோபோக்கள் குதித்தும், நடனமாடியும், குத்துச்சண்டை போட்டும் அசத்தின.

மேலும், அதிவேக ரோபோக்கள் 100 மீட்டர் தூரத்தை உசேன்போல்ட்டை விட வேகமாக ஓடி கடந்தன. இந்த சூழலில்தான், சீனாவின் பாதுகாப்பு துறை மனித உருவ ரோபோக்களின் ராணுவ பயன்பாடுகள் குறித்த ஆராய்ச்சியை துரிதப்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

பெருவெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,355

நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 355 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல உடல்களை மீட்டிருப்பதாகவும், காணாமல் போன 589 வெளிநாட்டினர் உட்பட 4 ஆயிரத்து 996 பேரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், இதுவரை 13 ஆயிரத்து 396 பேர் மீட்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். திபெத் பகுதியில், 43 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் ஆட்சியமைக்கப் போகும் வலது சாரி கட்சி

ஜெர்மனியின் சாக்ஸோனி - அன்ஹால்ட் மாகாண பேரவைத் தேர்தலில் தீவிர வலதுசாரியை சேர்ந்த ஏஎஃப்டி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. 83 இடங்களை கொண்ட பேரவையில், ஏஎஃப்டி கட்சி 39 இடங்களை கைப்பற்றியுள்ளது.

இது பெரும்பான்மைக்கு 3 இடங்கள் குறைவு என்றாலும், ஆட்சி அமைப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், உலக போருக்கு பிறகு முதல்முறையாக ஒரு தீவிர வலதுசாரி கட்சி ஆட்சியமைக்க போகிறது. அதேசமயம், கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த ஜெர்மனி பிரதமர் ஃப்ரீட்ரிச் மெர்ஸ் தலைமையிலான சிடியூ கட்சி, 15 இடங்களில் மட்டுமே வென்று படுதோல்வியை சந்தித்துள்ளது.

Related Link
இனி உலக வரைபடத்தை தேடாதீங்க, இதோ கைலாசா முகவரி

இனி உலக வரைபடத்தை தேடாதீங்க, இதோ கைலாசா முகவரி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போர்களில் மனித உருவ ரோபோக்களை பயன்படுத்த திட்டம்

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved