Also Watch
Read this
By: Manigandan Raja

2 நாட்கள் பயணமாக வரும் 19-ம் தேதி சீனா செல்லும் புதின் :
அமெரிக்க அதிபர் டிரம்பை தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதின், சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்..! சமீபத்தில் மூன்று நாட்கள் பயணமாக சீனா சென்றிருந்த டிரம்ப், அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து தைவான் பிரச்சனை, ஆயுத தளவாடங்கள் ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பற்றி ஆலோசனை நடத்தினார்.
அதன் தொடர்ச்சியாக ரஷ்ய அதிபர் புதின் வரும் 19-ம் தேதி சீனா செல்கிறார்.
ஈரான் போரால் ஈராக் எண்ணெய் ஏற்றுமதி வீழ்ச்சி :
ஈரான் போர் காரணமாக, ஹோர்முஸ் நீரிணை வழியாக மேற்கொள்ளப்படும் ஈராக் நாட்டின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
பாக்தாத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஈராக்கின் எண்ணெய் துறை அமைச்சர் பாசிம் முகமது, போர் சூழல் காரணமாக ஹோர்முஸ் நீரிணை பகுதி வழியே செல்லும் கப்பல்களுக்கான காப்பீட்டு தொகைகள் அதிகரித்துள்ளதால், எண்ணெய் டேங்கர் கப்பல்கள் அப்பகுதிக்குள் நுழைய மறுக்கப்படுவதாக கூறினார்.
ஹோர்முஸ் வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் :

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்க ஈரான் முடிவு செய்துள்ளதாக அந்நாட்டின் நாடாளுமன்ற தேச பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை குழுவின் தலைவர் இப்ராகிம் அஜிஜி தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் ஜலசந்தி வழியே குறிப்பிட்ட பாதையில் கப்பல்கள் பயணிக்கும் வகையில் இயக்க நடைமுறைகளை அதிகாரிகள் தயாரித்து வைத்துள்ளதாகவும், அவை விரைவில் வெளியிடப்படும் எனவும் கூறினார்.
தட்டம்மை நோய் பாதிப்பால் மேலும் 12 குழந்தைகள் உயிரிழப்பு :

வங்கதேசத்தில் தட்டம்மை நோய் பாதிப்பால் மேலும் 12 குழந்தைகள் பலியான நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 451 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கடந்த சில வாரங்களாக தட்டம்மை பரவல் அதிகரித்து வருவதால் தீவிர கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 111 பேருக்கு தட்டம்மை பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் நடத்தி கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு :

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் கிளர்ச்சிப்படையின் ராணுவ பிரிவு தலைவர் இஸ்-அல்-தின்-அல்-ஹதாத் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கடந்த 2023 அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேல் மீது 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஹமாஸ் அமைப்பு ஒரே நேரத்தில் ஏவி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved