Also Watch
Read this
By: Manigandan Raja

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தலுக்கு எதிராக ஆதரவு
செங்கடல் எண்ணெய் விநியோகப் பாதைகளில் ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் (Mohammed bin Salman) கெய்ரோவில் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் அல்-சிசி (Abdel-Fattah el-Sissi) யைச் சந்தித்து ஆதரவு கோரினார்.
செங்கடல் மற்றும் பாப் எல்-மண்டெப் பகுதியில் கடல்சார் போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்ய கூட்டுப் பொறுப்பை இரு தலைவர்களும் உறுதிப்படுத்தினர்.
மெக்காவின் வான் எல்லைக்குள் நுழைய முயன்ற டிரோன்கள்
மெக்காவின் வான் எல்லைக்குள் நுழைய முயன்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களின் டிரோன்களை சவுதி அரேபியாவின் வான் பாதுகாப்புப் படை இடைமறித்து சுட்டு வீழ்த்தியது. அமெரிக்கா-ஈரான் இடையே போர் தொடங்கியதில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது புனித தலம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்று சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved