Also Watch
Read this
By: Manigandan Raja

வானில் 41 முறை சமர்சால்ட் செய்து புதிய சாதனை
கனடாவைச் சேர்ந்த ஸ்கைடைவிங் வீரர் மார்க்-ஒலிவியர் டெஸ்மரே , வானில் குதிக்கும் போது தொடர்ந்து 41 முறை சமர்சால்ட் செய்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். கியூபெக்கில் 13,000 அடி உயரத்தில் இருந்து குதித்த அவர், பாராசூட்டை திறப்பதற்கு முன் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
வெம்ப்லி ஸ்டேடியம் அருகே தீ விபத்து
லண்டனில் உள்ள வெம்ப்லி ஸ்டேடியம் அருகே நீஸ் டன் பகுதியில் உள்ள கழிவு மறுசுழற்சி நிலையத்தில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது.இந்த தீ விபத்தால் ரயில் சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மர்ம நோயால் கென்யாவில் யானைகள் உயிரிழப்பு
கென்யாவின் தெற்கு பகுதியில் கடந்த ஜூன் மாதம் முதல் குறைந்தது 20 யானைகள் மர்ம நோயால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யானைகள் நடக்க முடியாமல் தடுமாறி, உடல் உறுப்புகளில் முடக்கம் ஏற்பட்டு பின்னர் உயிரிழப்பதாக வனவிலங்கு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். விஷம் காரணமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்தாலும், இதுவரை உறுதியான காரணம் கண்டறியப்படவில்லை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved