Also Watch
Read this
By: Manigandan Raja

அமெரிக்கா-இஸ்ரேல் உடனான பேரில் வென்றதாக ஈரான் அறிவிப்பு
அமெரிக்காவின் பொருளாதாரப் போர் நடவடிக்கைகள் முடிவுக்கு வரும் வரை ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டே இருக்கும் ஈரான் எச்சரித்துள்ளது. அமெரிக்கா ஆதரவு வளைகுடா நாடுகளுக்கு எச்சரிக்கை விடுப்பதாகவும், அமெரிக்கா-இஸ்ரேல் உடனான பேரில் தாங்கள் வெற்றி பெற்றுள்ளதாகவும் ஈரான் பெருமிதம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பலை கைப்பற்றியதாக ஈரான் அறிவிப்பு
ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் அமெரிக்காவின் அதிநவீன நீர்மூழ்கி கப்பலை கைப்பற்றியதாக ஈரான் தெரிவித்திருந்த நிலையில், அமெரிக்க ராணுவம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

தனது ஆளில்லா டிரோன் உள்ளிட்ட அனைத்து ராணுவ கருவிகளின் கட்டுப்பாடும் தங்கள் கையில் உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட பெரு வெள்ளம்
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் சொந்த வீடுகளிலிருந்து வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

மழைக்கு மத்தியில் படகுகள் மூலமும் கழுத்தளவு வெள்ளத்தில் நடந்து சென்றும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved